வசூல் வேட்டையில் மகாராஜா… எகிறும் டிக்கெட் முன்பதிவு…
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர். அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்

படத்தில், விஜய் சேதுபதியுடன் பாரதிராஜா, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த ஜூன் 14-ம் தேதி திரையரங்குகளில் வௌியானது. படம் வௌியான முதல் நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக்காக அமைந்திருக்கிறது என்றே சொல்லாம். நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரிக்கும் நிலையில், 50 கோடி ரூபாய் வசூலை தாண்டிஇருக்கிறது.

மேலும், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால், டிக்கெட் முன்பதிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வகையில் இன்று வாரவிடுமுறையை முன்னிட்டு, சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. படத்தை கண்டு ரசிக்க குடும்பம் குடும்பமாக மக்கள் படையெடுத்துச் செல்வதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.