Homeசெய்திகள்சினிமாகம்பீரமான கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

கம்பீரமான கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

-

கம்பீரமான கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பபடுபவர் விஜயகாந்த். சினிமா துறை நல்ல நடிகர்கள் பலரை பார்த்ததுண்டு, ஆனால் இவரைப் போல நல்ல மனிதரையும் பார்த்துள்ளது என்பது ஆச்சரியத்துக்குரியது என்றால் அது மிகையாகாது. பொது நலமே சுயநலம் என வாழ்ந்து வரும் மனிதர் விஜயகாந்த் .

ஆகஸ்ட் 25,1952 அன்று திருமங்கலத்தில் பிறந்தவர். விஜயராஜ் அழகர்சாமி என்னும் இவருடைய இயற்பெயரை இயக்குனர் காஜா என்பவர்தான் விஜயகாந்த் என மாற்றி வைத்தார். 1978 ல் சினிமா கனவுகளோடு சென்னை வந்த விஜயகாந்த் 1979இல் அகல் விளக்கு என்ற படத்தில் அறிமுகமானார். சினிமா யாரையும் அவ்வளவு எளிதாக வளர்த்து விடாது என்னும் கருத்தை உடைத்து தன் திறமையால் படிப்படியாக கஷ்டப்பட்டு முன்னேறி டாப் ஹீரோக்களில் ஒருவரானார். இவர் நடிப்பில் 1991 இல் நூறாவது படமாக “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் இவரை கேப்டன் விஜயகாந்த் என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.கம்பீரமான கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படியான கருத்துக்களையும் தன் படங்களில் தொடர்ந்து கூறி வந்தவர். சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சேதுபதி ஐபிஎஸ் என ஆக்சன் படங்களானாலும், வானத்தைப்போல, ரமணா, சின்ன கவுண்டர், சொக்கத்தங்கம், எங்கள் அண்ணா போன்ற எமோஷனல் கதாபாத்திரங்களாக இருந்தாலும் அவற்றில் தனி முத்திரை பதித்தவர். கேமராவை பார்த்து ஆக்ரோஷமாக இவர் பேசினால் அரங்கமே அதிரும் அளவுக்கு அவ்வளவு கைத்தட்டல்கள் பறக்கும். டூப் போடாமல் இவர் நடித்த சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளக்கும்.கம்பீரமான கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். ஆண்டு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பல செய்து வருகிறார். 2001 இல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த விஜயகாந்த், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த நடிகர் சங்கத்தை லாபகரமானதாக மாற்றினார். தான் நடிக்கும் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் என்ன உணவு உண்கிறாரோ அதையே கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்று திட்டவட்டமாக பின்பற்றியவர்.கம்பீரமான கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

சினிமாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டில் அரசியலையும் ஒரு கை பார்த்தார்.1993 இல் ரசிகர் மன்றம் சார்பில் இவருடைய ரசிகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றியின் ஊக்கத்தால் மக்கள் நலனுக்காக முழு நேர அரசியல் சிந்தனையில் இறங்கினார் விஜயகாந்த். அதன்படி 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2006 தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார். பின்னர் 2011 இல் இவருடைய கட்சி எதிர்க்கட்சியாக அந்தஸ்து பெற்று புதிய வரலாற்றை பதிவு செய்தது. அசைக்க முடியாத ஆல மரமாக வளர்ந்து நின்ற பெரிய கட்சிகளை சற்று ஆட்டம் காண வைத்தார் விஜயகாந்த். சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் வெகு சிலரே. அதில் மிக முக்கியமான இடத்தை உருவாக்கிக் கொண்டவர் விஜயகாந்த்.

தொடர்ந்து அவருடைய உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளினால் இவரால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியாமல் போனது. நரம்பியல் தொடர்பான பிரச்சனையால் சரிவர பேச முடியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் இவர் மீது கொண்ட அன்பு துளியளவும் குறையவில்லை.கம்பீரமான கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் ஸ்பெஷல்!

இந்நிலையில் தான் உடல் நலப் பிரச்சினையால் நவம்பர் 18ஆம் தேதி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்புச் சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. சாதாரண சிகிச்சை தான் விரைவில் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. நவம்பர் 23 அன்று அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவே அறிவிக்கப்பட்டது. அதன்பின் நவம்பர் 29 அன்று வெளியான அறிக்கை ரசிகர்களின் நம்பிக்கையை சற்று வலுவிழக்க செய்தது. மியாட் மருத்துவமனை நிர்வாகம் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்ற அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து ஐசியு வில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் மீண்டு பழைய நிலைமைக்கு வர வேண்டும் என நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் செய்து வருகின்றனர்.

விஜயகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என நாமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

MUST READ