Homeசெய்திகள்சினிமாஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்!

ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்!

-

- Advertisement -

ஜூனியர் என்டிஆரின் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தேவரா எனும் திரைப்படம் வெளியானது. ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்!இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று நிலையிலும் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதே சமயம் ஜூனியர் என்டிஆர், வார் 2 திரைப்படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ஜூனியர் என்டிஆர். அதன்படி பிரசாந்த் நீல் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு NTR 31 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தினை நந்தமுரி தரகா இராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இப்படம் 2026 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆரின் புதிய படத்தில் இணையும் மலையாள பிரபலங்கள்!அடுத்தது இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடிகை ருக்மினி வசந்த் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர்கள் பிஜு மேனன் மற்றும் டோவினோ தாமஸ் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ