spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபகத் ஃபாசிலின் ஆவேஷம்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

ஃபகத் ஃபாசிலின் ஆவேஷம்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
ஃபகத் ஃபாசில் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைப்போடு போடும் ஆவேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் சுமார் 100 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த ஆண்டு மலையாளம் சினிமாவில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அதிரி புதிரி ஹிட் அடித்தன. நடப்பாண்டில் வெளியான பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழிலும் பெரும் ஹிட் அடித்தன.

we-r-hiring
அந்த வகையில் தற்போது ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறு வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ஃபகத்துடன் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படம் வெளியான 13 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.

சுமார் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆவேஷம் திரைப்படம் தற்போது சுமார் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டி உள்ளது. அதுமட்டுமன்றி, 25 நாட்களை கடந்த இத்திரைப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஆவேஷம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் மே மாதம் 9-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதனால், ஃபகத் ஃபாசில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

MUST READ