- Advertisement -
படம் வெளியான நாள் முதலே அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோலிவுட் எனும் மலையாள திரையுலகில் இன்று வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடிக்கின்றன. அண்மைக் காலங்களால, மலையாளத்தில் வெளியாகும் படங்கள் மலையாள ரசிகர்கள் மட்டுமன்றி தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அண்மையில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இத்திரைப்படம் கடந்த வாரம் வௌியானது. இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
