Homeசெய்திகள்சினிமாமலையாள திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்... சோகத்தில் மோலிவுட்...

மலையாள திரைப்பட தயாரிப்பாளர் திடீர் மரணம்… சோகத்தில் மோலிவுட்…

-

பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால், மோலிவுட் திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

குறுகிய வட்டத்தில் பயணித்துக் கொண்டிருந்த மலையாள திரையுலகம் இன்று பான் இந்தியா அளவில் படங்கள் இயக்கி வெளியிட்டு வருகின்றனர். மலையாள திரையுலகின் சிறப்பு என்றால், பிரபலமா இயக்குநர், பிரபலமான தயாரிப்பாளர் முகம் தெரிந்த நடிகர்கள் மட்டுமில்லாமல், புது முக இயக்குநர்களையும், புதுமுக நடிகர்களையும் அறிமுகப்படுத்துவது தான். அந்த வகையில், சொற்ப அளவில் மட்டுமே படங்கள் தயாரித்தாலும் பிரபலமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் நோபல் ஜோஸ்.

என் மேழுதிரி அதழங்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் நோபல் ஜோஸ். அனூப் மேன், மியா ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து நோபல் இயக்கிய இரண்டாவது திரைப்படம் மெட்ராஜ் லாட்ஸ். இத்திரைப்படம் அதே ஆண்டில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கிருஷ்ணன் குட்டி பனிதுடங்கி, சாலமன் ஆகிய படங்களை தயாரித்தார்.
இந்நிலையில், கொச்சியில் வசித்து வந்த நோபல், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 54. இவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் திருப்புனிதுறையில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். மேலும், அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் மற்றும் நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ