ஜெய் பீம் புகழ் மணிகண்டன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். இந்த படத்தை குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் காதல் படமாக உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் ட்ரைலரை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
It was such a pleasure to receive your wishes over call @Udhaystalin sir 🙏
I feel so elated to learn that you loved & enjoyed our film #Lover ❤️
For an upcoming artist like me, It feels great to be appreciated for my performance in detail. It gives me more energy to explore…
— Manikandan Kabali (@Manikabali87) February 4, 2024
அந்த வகையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், லவ்வர் படத்தை பார்த்து நடிகர் மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டு பாராட்டி உள்ளார். இந்நிலையில் இது குறித்து நடிகர் மணிகண்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “லவ்வர் படத்தை நீங்கள் ரசித்தீர்கள் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போன்று வளர்ந்து வரும் நடிகருக்கு உங்களுடைய பாராட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதே சமயம் இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆற்றலையும் அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.