spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.... கதாநாயகி யார் தெரியுமா?

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு…. கதாநாயகி யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகிறது.மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.... கதாநாயகி யார் தெரியுமா?

இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் மணிரத்னம். இவர் தனித்துவமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது இயக்கத்தில் தற்போது தக் லைஃப் படம் உருவாகி இருக்கிறது. கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.... கதாநாயகி யார் தெரியுமா?இதன் பின்னர் மணிரத்னம், சிம்புவை வைத்த புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு. அதை தொடர்ந்து தக் லைஃப் படமும் உருவாகி இருக்கிறது. இதன்பிறகு சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் சிங்கிளாக களமிறங்க இருக்கிறாராம். எனவே எதிர்பார்ப்பு இப்பொழுதே அதிகரித்துள்ளது. மேலும் இந்த படமானது காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு.... கதாநாயகி யார் தெரியுமா?

we-r-hiring

அடுத்தது இப்படமானது தக் லைஃப் படத்தின் ரிலீசுக்கு பிறகு உடனடியாக தொடங்க இருக்கிறதாம். அதாவது STR 49 திரைப்படம் தான் சிம்புவின் அடுத்த படமாக உருவாக இருந்தது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பிரச்சினையில் இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகும் என சொல்லப்படுகிறது. எனவே தான் சிம்பு, உடனடியாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ