நடிகை மஞ்சு வாரியார் பைக் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வருகின்றன.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்திலும் மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது அஜித்துடன் மஞ்சு வாரியரும் பைக் ட்ரிப் சென்றார். இருவரும் பல ஊர்களுக்கு ஒன்றாக சேர்ந்து பயணம் செய்தனர். இது புதிய அனுபவமாக இருந்ததாகவும் அஜித்திடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும் மஞ்சு தெரிவித்தார்.
அதையடுத்து பைக் பயணத்தின் மீது மஞ்சுவுக்கு அதிக ஆர்வம் உண்டாகவே சொந்தமாக BMW பைக் வாங்கினார்.
தற்போது பல இடங்களுக்கு சாகசமாக சென்று வருகிறார். இந்நிலையில் மலையாள நடிகர் சவுபின் சாகிர் உடன் மஞ்சு பைக் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து பதிவு செய்த அவர் “நான் நேர்கொள்ளாத பயங்கள் எனது எல்லையாக மாறிவிடும். எனக்கு நல்ல நண்பனாகவும் அதே நேரத்தில் மிகவும் பொறுமையான வழிகாட்டியாகவும் இருந்த சவுபின் சாகிர் மற்றும் பினீஷ் ஆகியோருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.