AK62 திரைப்படம் தான் அஜித்தின் சினிமா கேரியரில் மிக வேகமாக முடிக்கப்பட்ட படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன்பு அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கியிருப்பதாகவும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் தயாரிப்பாளர் தரப்பில் கதை திருப்தி இல்லை என்று தெரிவித்ததால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகிவிட்டார்.
விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி படத்தில் இணைந்துள்ளார். ஆனால் இது தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில் இயக்குனர் மகிழ் திருமேனி படத்தின் படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி திட்டமிட்ட நாட்களில் படத்தை முடித்தால் இது அஜித்தின் சினிமா கேரியரில் மிகவும் வேகமாக முடிக்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைக்கும்.
இதற்கிடையில் அஜித் தனது பைக்கில் உலக சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளாராம். படத்தின் வேலைகளை விரைவில் முடித்துவிட்டு பைக் சுற்றுப்பயணம் செல்ல தயாராகி வருகிறாராம். அதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு குறிப்பிட்ட தேதிகளில் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.