Homeசெய்திகள்சினிமாரஜினியின் 'கூலி' படத்தில் இணையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர்!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர்!

-

- Advertisement -

நடிகர் ரஜினி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிரம்மாண்ட வெற்றி கண்டது. அதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. ரஜினியின் 'கூலி' படத்தில் இணையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர்!இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக ரஜினி தனது 171வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ட்ரெண்டிங் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். இதில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சத்யராஜ் மற்றும் பகத் பாஸில் ஆகியோர் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ரஜினியின் 'கூலி' படத்தில் இணையும் மஞ்சும்மெல் பாய்ஸ் பட நடிகர்!ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில் நடித்திருந்த சௌபின் சாஹிர், கூலி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்ற புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ