மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
- Advertisement -
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளன.

என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் சலீம். இப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மழை பிடிக்காத மனிதன் என்று தலையிடப்பட்ட இப்படத்தை விஜய் மில்டன் எழுதி, இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டையூ டாமன் பகுதிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.


இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகி உள்ளார். இவர்களுடன் ரமணா, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சலீம் படத்தின் தொடர்ச்சியாக இருக்கும என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனி பாடல்களுக்கு இசை அமைக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையை பார்க்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்யும இப்படத்தை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளன. பூஜையுடன் டப்பிங் பணிகள் ஆரம்பம் ஆகியுள்ளதை படக்குழு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளது.