Homeசெய்திகள்சினிமாஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட 'மிஷன் சாப்டர் 1' படக்குழு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட ‘மிஷன் சாப்டர் 1’ படக்குழு!

-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மிஷன் சாப்டர் 1 பட குழு பார்வையிட்டுள்ளனர்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட 'மிஷன் சாப்டர் 1' படக்குழு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதில் தடம், தடையற தாக்க,குற்றம் 23 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு அருண் விஜய் நடிப்பில் ‘மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதே சமயம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் அருண் விஜய், மதுரை உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட 'மிஷன் சாப்டர் 1' படக்குழு!

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அர்ஜுன் விஜய் இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இவர்களுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நடிகர் சூரியும், பார்வையிட வந்துள்ளனர். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ