spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு…… நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் விஜய் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து இருக்கும் நிலையில் பலரும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!இந்நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் இன்று (அக்டோபர் 27) நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொடங்க இருந்த இந்த மாநாடு தொண்டர்களுக்காக ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சியின் முதல் மாநாடு தொடர்பாக விஜய்க்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபு, நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது விஜய் குறித்து பேசி உள்ளார். விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!அப்போது, “விஜய்க்கு என்னுடைய முழு ஆதரவு. என்னுடைய தந்தை ஆசியும் என்னுடைய ஆதரவும் அவருக்கு உண்டு. விஜய் நல்ல நிலைக்கு வர வேண்டும் என ஆசீர்வதிக்கிறேன். விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவனுடைய ஆசிர்வாதம் இருக்கிறது. அவர் நல்ல பாதையில் செல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

MUST READ