Homeசெய்திகள்சினிமாஅசால்ட்டா செஞ்சு அசத்திட்டாரு🔥... ரியல் போலீசுக்கே டப் கொடுக்கும் நாகசைதன்யா!

அசால்ட்டா செஞ்சு அசத்திட்டாரு🔥… ரியல் போலீசுக்கே டப் கொடுக்கும் நாகசைதன்யா!

-

நடிகர் நாகசைதன்யா காவல்துறையினருடன் சந்திப்பு நடத்திய சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து ‘கஸ்டடி’ படத்தை இயக்கியுள்ளார். கஸ்டடி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. க்ரித்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தற்போது படக்குழுவினர் மிகத் தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் களமிறங்கியுள்ளனர். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காகத் தான் இப்படி ஒரு செய்தியை பரப்பினர்.

லாக்கப்பில் இருக்கும் வெங்கட் பிரபுவை நாகசைதன்யா விசாரிக்குமாறு இருந்தது. இந்நிலையில் தராது நாகசைதன்யா தெலுங்கானா மாவட்ட காவல்துறையினருடன் ஒரு நாள் முழுவதும் நேரம் செலவிட்டுள்ளார்.

Custody

அதில் போலீஸ் அதிகாரிகளுக்கே டப் கொடுக்கும் வகையில் போலீஸ் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். பல போலீசார் தங்கள் நாகசைதன்யாவின் மிகப்பெரிய ரசிகர்கள் என்பதை தெரிவித்துள்ளனர். மேலும் பல போலீஸ் காரர்கள் நாகசைதன்யா உடன் ஜாலியாக டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

MUST READ