Homeசெய்திகள்சினிமாநானி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை

நானி படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை

-

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார், இவர் இயக்குனர் அட்லீயிடம் இணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே 100 கோடி வசூல் கொடுத்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். அவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுக்கு கதை கூறியுள்ளதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நானியுடன் அவர் இணைந்துள்ளார். நானி தற்போது ஹாய் நான்னா படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே, நானியை வைத்து சிபி இயக்கும் புதிய படத்தில் பூஜா ஹெக்டேவை நாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ