Homeசெய்திகள்சினிமாசூர்யாவுக்கு வில்லனாகும் நட்டி என்கிற நட்ராஜன்..... எந்த படத்தில் தெரியுமா?

சூர்யாவுக்கு வில்லனாகும் நட்டி என்கிற நட்ராஜன்….. எந்த படத்தில் தெரியுமா?

-

சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு கோவை சரளா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படம் மிகப்பிரமாண்டமாக சுமார் 300 கோடி ரூபாய் பொருட்செலவில் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது கொடைக்கானல் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதைத்தொடர்ந்து இன்று காலை இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக நட்டி என்று அழைக்கப்படும் நடராஜன் நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நம்ம வீட்டு பிள்ளை, கர்ணன், வால்டர் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ