spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா80 சதவீதம் ஷூட்டிங் ஓவர்..... சூர்யாவின் கங்குவா லேட்டஸ்ட் அப்டேட்!

80 சதவீதம் ஷூட்டிங் ஓவர்….. சூர்யாவின் கங்குவா லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

கங்குவா திரைப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைக்கிறார். சிங்கம் 2 படத்திற்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத், சூர்யா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது.

we-r-hiring

மிகப் பிரம்மாண்டமாக சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ஒரு வரலாற்று சரித்திர படமாக தயாராகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படம் குறித்து பல தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதனை ரசிகர்களும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் ரசிகர்கள் அனைவரும் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் அப்டேட் ஏதேனும் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதன்படி இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சூர்யாவின் பிறந்தநாளுக்கு முந்தைய நாளான ஜூலை 22-ல் வெளியாகும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கங்குவா திரைப்படத்தின் கொடைக்கானல் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 80% படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் 30 நாட்களுக்கு மேலான படப்பிடிப்புகள் மீதம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ