Homeசெய்திகள்சினிமாபிசினஸ் விளம்பரத்தில் நயன்தாரா தீவிரம்... வீடியோ வைரல்...

பிசினஸ் விளம்பரத்தில் நயன்தாரா தீவிரம்… வீடியோ வைரல்…

-

நயன்தாரா வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்பு மட்டுமன்றி பிசினஸிலும் ஆர்வம் செலுத்தி வரும் முன்னணி நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 20-ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பணியாற்றி வரும் நயன்தார், விஜய், ரஜினி, அஜித், சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னணி மற்றும் வளரும் இளம் நாயகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார் நயன்தாரா. தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன், கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. நடிப்பு மட்டுமன்றி தற்போது குடும்பம், குழந்தைகளை பார்க்கவும் நேரம் செலவிட்டு வருகிறார் நயன்தார். இது தவிர, ரவுடி பிக்சர்ஸ் என நிறுவனம் தொடங்கி தயாரிப்பிலும் இறங்கினார். இதைத் தொடர்ந்து லிப் பாம் கம்பெணி, நயன் ஸ்கின், டிவைன் புட்ஸ் மற்றும் பெமி நயன் என பல நிறுவனங்களை தொடங்கி உள்ளார்.

தற்போது தான் தொடங்கி இருக்கும் நிறுவனங்களுக்காக தீவிர விளம்பரங்களில் நயன்தாரா இறங்கி உள்ளார். நயன் ஸ்கின் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை பயன்படுத்தி நயன்தாரா வெளியிட்டுள்ள காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ