- Advertisement -
திரைத்துறையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் பெரும்பாலோனோர் சினிமா மட்டுமில்லாமல் தொழில் நிறுவனங்களையும் தொடங்கி வருகின்றனர். பல நடிகர்கள் உணவகங்கள், திரையரங்குகள், திரைப்பட தயாரிப்பு, ஆடை நிறுவனங்கள், நகை தொழில், விளம்பரங்கள், மாடலிங் பல தரப்பட்ட தொழில்களில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் பல தொழில்களில் முனைப்பு காட்டி வருகிறார். தொடக்கத்தில் கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நயன்தாரா, அடுத்து லிப் பாம் கம்பெனியை தொடங்கினார்.
இதையடுத்து, சாய் வாலா மற்றும் பிரபல டிவைன் புட் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். மேலும், தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ‘9 ஸ்கின்’ எனும் பெரில் ஸ்கின் கேர் நிறுவனத்தை தொடங்கினார். இதுமட்டுமன்றி குடும்பத்தினர் மற்றும் தனது இரட்டை குழந்தைகளுடனும் அவர் நேரத்தை கழித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில், பெண்களுக்கான நாப்கின்களை உற்பத்தி செய்யும் ஃபெமி9 என்ற புதிய நிறுவனத்தையும் அவர் தொடங்கி உள்ளார்.