Homeசெய்திகள்சினிமா'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்!

‘அரண்மனை 4’ படத்தின் புதிய புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்!

-

சுந்தர் சி, தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை தந்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதே சமயம் இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். 'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்! அதன்படி வீராப்பு, சண்டை, தலைநகரம், இருட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி, ஹாரர் திரில்லர் படங்களை இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருபவர். அந்த வகையில் இவர் இயக்கியிருந்த அரண்மனை 1, 2, 3 போன்ற படங்கள் காமெடி கலந்த ஹாரர் போன்ற படங்கள் காமெடி கலந்த ஹாரர் படங்களாக வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றியை பெற்றது.'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்! அடுத்ததாக சுந்தர் சி, அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். அரண்மனை 4 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தமன்னா, ராஷி கண்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்! மேலும் யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பூ ஆகியோர் இணைந்து அக்னி சினிமா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர். 'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்!ஹிப் ஹாப் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இன்னும் நிலுவையில் உள்ளது. 'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்!இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே சமயம் இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. 'அரண்மனை 4' படத்தின் புதிய புகைப்படங்கள்.... இணையத்தில் வைரல்!இனிவரும் நாட்களில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ