Homeசெய்திகள்சினிமா'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட ஹீரோவின் அடுத்த படம் .... ஷூட்டிங் எப்போது?

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?

-

- Advertisement -

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட ஹீரோவின் அடுத்த படம் .... ஷூட்டிங் எப்போது?

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், சரத்குமார், சரண்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. நடிகர் பவிஷ் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதாவது தனுஷின் அக்கா மகன் என்பதாலோ என்னவோ அவருடைய நடிப்பில் தனுஷின் சாயல் தெரிந்தாலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் உற்சாகப்படுத்தினார்.'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட ஹீரோவின் அடுத்த படம் .... ஷூட்டிங் எப்போது? எனவே இதைத்தொடர்ந்து அவர் என்ன படம் நடிக்கப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது இது குறித்த புதிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு பிறகு நடிகர் பவிஷ் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி தற்போது மகேஷ் என்ற புதுமுக இயக்குனருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம். கிட்டத்தட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பட ஹீரோவின் அடுத்த படம் .... ஷூட்டிங் எப்போது?மேலும் கலர்ஃபுல்லான காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் தெலுங்கில் இருந்து புதுமுக நடிகையை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ