spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் சிம்புவை இயக்குவேன்......உறுதி செய்த ஓ மை கடவுளே இயக்குனர்!

நான் சிம்புவை இயக்குவேன்……உறுதி செய்த ஓ மை கடவுளே இயக்குனர்!

-

- Advertisement -

கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. நான் சிம்புவை இயக்குவேன்......உறுதி செய்த ஓ மை கடவுளே இயக்குனர்!இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவை பார்த்த சிம்பு, இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவை பாராட்டி இருக்கிறார். ஏற்கனவே ஓ மை கடவுளே படத்தை பார்த்தும் நடிகர் சிம்பு பட குழுவினரை பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில், “சிம்பு சார் என்னை அழைத்து அவருடைய ஸ்டைலில் என்னை பாராட்டினார். ஓ மை கடவுளே படத்தையும் பாராட்டி இருந்தார் . நான் சிம்பு சாருக்காக எழுதிய ஸ்கிரிப்ட் வித்தியாசமானது. அவர் தயாரானால் இருவரும் இணைந்து படத்தை தொடங்குவோம் என்பதை தெளிவுப்படுத்துகிறேன்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

நடிகர் சிம்பு பத்து தல படத்திற்கு பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள STR48 படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆகவே நடிகர் சிம்பு, STR48 படத்தை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ