ஆபரேஷன் சிந்தூர் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானை முறியடித்து வருகிறது. இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சில மணி நேரங்களில் நீக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் நிக்கி விக்கி பக்னாணி பிலிம்ஸ் மற்றும் தி கண்டன்ட் இன்ஜினியர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த போஸ்டரில் முகம் காட்டப்படாத பெண் ராணுவ அதிகாரி தனது இடது கையில் துப்பாக்கியுடனும், வலது கையில் சிந்தூர் வைப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. அந்த வகையில் கதாநாயகி அறிவிக்கப்படாததாலும், பொதுமக்களின் கலவையான விமர்சனங்களாலும் தயாரிப்பாளர்கள் போஸ்டரை சமூக வலைதளங்களில் நீக்க வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் இது குறித்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது தவிர 30க்கும் மேலான பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் மகாவீர் ஜெய்ன் தான் முதல் ஆளாக இந்த தலைப்பை பதிவு செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.