spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'சந்திரமுகி 2' பிளாக்பஸ்டர்னா...... சந்திரமுகி 3 கன்ஃபார்ம்!

‘சந்திரமுகி 2’ பிளாக்பஸ்டர்னா…… சந்திரமுகி 3 கன்ஃபார்ம்!

-

- Advertisement -

பி வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இதில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேல் மற்றும் பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தற்போது வரையிலும் பலரின் ஃபேவரைட் படமாக இருக்கிறது.

இந்நிலையில் 17 வருடங்களுக்குப் பிறகு பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து கங்கனா ரனாவத் மற்றும் வடிவேலு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் மூன்றாம் பாகத்திற்கான தொடர்பு ஒன்றை பி வாசு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி சந்திரமுகி 2 திரைப்படம் ஹிட்டானால் சந்திரமுகி 3 படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. சந்திரமுகி 3க்கான கதையை பொருத்தே அதில் ரஜினி நடிப்பாரா? இல்லை ராகவா லாரன்ஸ் நடிப்பாரா? என்று முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ