Homeசெய்திகள்சினிமாலிங்குசாமி இயக்கும் பையா 2.... ஹீரோவாகும் பிரபல நடிகரின் தம்பி!

லிங்குசாமி இயக்கும் பையா 2…. ஹீரோவாகும் பிரபல நடிகரின் தம்பி!

-

- Advertisement -

லிங்குசாமி இயக்கும் பையா 2.... ஹீரோவாகும் பிரபல நடிகரின் தம்பி!கடந்த 2010ல் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் பையா.கார்த்திக்கு ஜோடியாக இதில் தமன்னா நடித்திருந்தார். லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் லிங்குசாமி இயக்க இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதன்படி சில தினங்களுக்கு முன்பாக பையா 2 படத்தில் நடிப்பதற்காக கார்த்தியிடம் கேட்டபோது, கார்த்தி வேறு படங்களில் கமிட்டாகி இருப்பதால் கார்த்தியினால் பையா 2 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது அதனால் நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக பல செய்திகள் வெளிவந்தது.லிங்குசாமி இயக்கும் பையா 2.... ஹீரோவாகும் பிரபல நடிகரின் தம்பி!

we-r-hiring

ஆனால் தற்போது பையா 2 படத்தை மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பையா 2 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷ் முரளி ஏற்கனவே விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ