பராசக்தி படம் குறித்து இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா, பசில் ஜோசப், பிரித்விராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். 1960 காலகட்டத்தில் கடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்படுவதால் படத்தில் நடிக்கும் நடிகர்கள் அந்த கால தோற்றத்தில் நடிக்கின்றனர். எனவே படத்தின் படப்பிடிப்பு ரியல் லொகேஷனில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி மதுரை, காரைக்குடி, சிதம்பரம், இலங்கை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#Parasakthi is The Large Scale Periodic Film Like #RRRMovie – @AakashBaskaran 🥵🔥 pic.twitter.com/Gyw8Bewb7S
— Lord SK (@KingSK_17) March 22, 2025
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “பராசக்தி படமானது ஆர்.ஆர்.ஆர் படத்தைப் போல் பெரிய அளவிலான பீரியாடிக் படம். பராசக்தி என்ற டைட்டில் கிடைத்தது பெருமையாக இருக்கிறது. இந்த படத்தை 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜயின் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.