Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் ட்ரைலர்... பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள தண்டட்டி!

கவனம் ஈர்க்கும் ட்ரைலர்… பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள தண்டட்டி!

-

பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள தண்டட்டி படத்தின் ட்ரைலர் கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் பசுபதி பெரும்பாலான படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு பா ரஞ்சித்- ஆர்யா கூட்டணியில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்து, கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பசுபதி தற்போது ‘தண்டட்டி‘ எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ராம் சங்கையா இயக்கியுள்ளார். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக பசுபதி நடித்துள்ளார். மேலும் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Image

இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் கவனம் ஈர்த்துள்ளது. படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ