- Advertisement -
மீண்டும் நாயகனாக நடிக்கும் நடிகர் பசுபதியின் ‘தண்டட்டி’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

அறிமுக இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகி வரும் ’தண்டட்டி’ படத்தில் பசுபதி கதையின் நாயகனாகவும், விவேக் பிரசன்னா, ரோகினி, அம்மு அபிராமி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
சர்தார், ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ப்ரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது, இப்படத்தின் மாறுபட்ட முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சார்பட்டா படத்தின் மூலம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ள நடிகர் பசுபதி. தற்போது ’தண்டட்டி’ படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.