Homeசெய்திகள்சினிமாபவன் கல்யாணின் 'ஓஜி' படம் எப்படி இருக்கு?.... ரசிகர்களின் விமர்சனம்!

பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் எப்படி இருக்கு?…. ரசிகர்களின் விமர்சனம்!

-

- Advertisement -

பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் தே கால் ஹிம் ஓஜி எனும் திரைப்படம் நேற்று ( செப்டம்பர் 24) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை பிரபாஸின் ‘சாகோ’ திரைப்படத்தை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளார். பவன் கல்யாணின் 'ஓஜி' படம் எப்படி இருக்கு?.... ரசிகர்களின் விமர்சனம்!இந்த படத்தில் பவன் கல்யாண் உடன் இணைந்து பிரியங்கா மோகன், பிரகாஷ்ராஜ், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்கிற்கு திரண்டு வருகின்றனர். அதே சமயம் இந்த படம் குறித்த தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது ‘ஓஜி’ படம் பற்றிய ரசிகர்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.

அதாவது தமிழில் அஜித்துக்கு ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் எப்படியோ அதே போல தான் பவன் கல்யாணுக்கு ‘ஓஜி’ திரைப்படம். டாட்டூ காட்சி முதல் பல காட்சிகள் அப்படியே ஒத்துப்போகிறது. இந்த படத்தை பவன் கல்யாண் ரசிகர்களாக இருந்தால் ஒரு முறை பார்க்கலாம் என்று ரசிகர்கள் தங்களின் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர்.

we-r-hiring

இது தவிர ட்விட்டரில் ரசிகர் ஒருவர், “குட் பேட் அக்லி படத்தில் ரசிகர்கள் ரசிக்கும் காட்சி பல இருந்தன. அதேபோல் ஓஜி படத்திலும் அனைவரும் ரசிக்கும் அதிரடி காட்சிகள் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “முதல் பாதி அருமையாக இருக்கிறது. இரண்டாம் பாதி சராசரியாக இருக்கிறது. பவன் கல்யாண் நடிப்பு மற்றும் தமனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. இயக்குனர் சுஜித் இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனால் அவருடைய மேக்கிங் நன்றாக உள்ளது. எமோஷனல் கனெக்ட் எதுவும் இல்லை. சண்டை காட்சிகள் வேற லெவலாக இருக்கிறது. இடைவேளை, போலீஸ் ஸ்டேஷன் காட்சி, கிளைமேக்ஸ் ஆகியவை படத்தின் ஹைலைட்ஸ்” என்று தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

MUST READ