Homeசெய்திகள்சினிமாஏ.ஆர். ரகுமான் இசையில் 'பெடி' பட முதல் பாடல்.... அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

ஏ.ஆர். ரகுமான் இசையில் ‘பெடி’ பட முதல் பாடல்…. அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

பெடி பட முதல் பாடல் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.ஏ.ஆர். ரகுமான் இசையில் 'பெடி' பட முதல் பாடல்.... அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு!

தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராம்சரண். இவரது நடிப்பில் கடைசியாக ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இவர் ‘உப்பெனா’ படத்தின் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பெடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், ரித்தி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர். ரகுமான் இப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார்.ஏ.ஆர். ரகுமான் இசையில் 'பெடி' பட முதல் பாடல்.... அறிவிப்பு ப்ரோமோ வெளியீடு! மேலும் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படமானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அடுத்தது இந்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது.

we-r-hiring

அதன்படி வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி இந்த படத்தில் இருந்து ‘சிக்கிரி’ எனும் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோவையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ராம்சரண் – ஜான்விகபூர் ஆகிய இருவருக்குமான காதல் பாடலாக வெளியாக உள்ள இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ