கனா காணும் காலங்கள் என்று தொடரின் மூலம் தனது திரைப்படத்தை தொடங்கி வழக்கு எண் 18/9 என்ற படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. அதை தொடர்ந்து இவர் இறுகப்பற்று போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். எனவே இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நல்ல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் திடீரென நடிகர் ஸ்ரீ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாச வீடியோக்களை பதிவிட தொடங்கினார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் ஸ்ரீயின் நண்பர்கள் சிலர் அவர் மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியதோடு, ஸ்ரீ எங்கே இருக்கிறார் என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லை என்றும் பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் ஸ்ரீ போதைப் பழக்கத்தால் தான் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகி இருக்கிறார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேசமயம் நடிகர் ஸ்ரீ, தான் புகை பழக்கத்தை கைவிட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது எனவும் மக்களும் புகை பழக்கத்தை கைவிட வேண்டும் எனவும் கூறி வீடியோ ஒன்றைவெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து ஸ்ரீயின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “நலம் விரும்பிகள், நண்பர்கள், சோசியல் மீடியா நபர்கள் ஆகியோருக்கு இந்த தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். நடிகர் ஸ்ரீராம் தற்போது மருத்துவ பராமரிப்பில் இருக்கிறார். மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சில காலம் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருப்பார். அவர் தற்போது குணமடைவதில் முழு கவனம் செலுத்தி வருவதால் அவரைப் பற்றி யாரும் அவதூறு பரப்ப வேண்டாம். அவர் குணமடைவதில் கவனம் செலுத்தும் போது அவருடைய தனிப்பட்ட உணர்வுகளை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -