Homeசெய்திகள்சினிமாமன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்... எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்...

மன்சூர் அலிகான் சர்ச்சை விவகாரம்… எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவுக்கு போலீஸ் கடிதம்…

-

- Advertisement -

மன்சூர் அலிகான் விவகாரத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கக்கோரி நடிகை த்ரிஷாவுக்கு காவல்துறை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக திரிஷா குறித்து மன்சூர் அலிகானின் சர்ச்சை பேச்சு வைரலாகி பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து டிஜேபிக்கு மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன்படி, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு திரிஷா, “தவறு செய்வது மனித இயல்பு மன்னிப்பது தெய்வீகத் தன்மை” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, நடிகர் சிரஞ்சீவி, த்ரிஷா ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகை த்ரிஷா எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டது.

MUST READ