spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'பொன்னியின் செல்வன்' தான் ஐஸ்வர்யா ராயின் சிறந்த படம்... புகழ்ந்து பேசிய அபிஷேக் பச்சன்!

‘பொன்னியின் செல்வன்’ தான் ஐஸ்வர்யா ராயின் சிறந்த படம்… புகழ்ந்து பேசிய அபிஷேக் பச்சன்!

-

- Advertisement -

பொன்னியின் செல்வன் தான் ஐஸ்வர்யா ராயின் சிறந்த படம் என்று அபிஷேக் பச்சன் புகழந்து பேசியுள்ளார்.

we-r-hiring

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகம் வெளிவந்தது.
இந்தப் படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி என இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

காதல், வன்மம் என இரண்டு பாகங்களிலுமே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் பாராட்டி பேசியுள்ளார்.

சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ( IIFA) சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் அபிஷேக் பச்சன், விக்கி கௌசலுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அபிஷேக் பச்சன் “ஐஸ்வர்யா ராய் இதுவரை நடித்ததிலேயே மிகவும் சிறந்த படம் பொன்னியின் செல்வன் 2. இது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரும் சாதனை. வெவ்வேறு லேயர்களை கொண்ட அந்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் அற்புதமாக நடித்திருந்தார். அவரைக் கண்டு நான் மிகவும் பெருமை அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

MUST READ