Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பேராதரவை பெற்ற போர் தொழில்..... ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரசிகர்களின் பேராதரவை பெற்ற போர் தொழில்….. ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான திரைப்படம் போர் தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் கூட்டணியில் இப்படம் உருவாகியிருந்தது. இதனை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி இன்று வரை உலக அளவில் 60 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, உட்பட தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்த படம் ராட்சசன் படத்திற்கு பிறகு முக்கியமான படமாக பேசப்படுகிறது.

இந்நிலையில் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஏற்கனவே கடந்த ஜூலை 7ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் இப்படம் தொடர்ந்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருவதால் படத்தின் தயாரிப்பு நிறுவனமானது சோனி லைவ் நிறுவனத்திடம் ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டது.

அதன் பின் ஒத்திவைக்கப்பட்ட போர் தொழில் படத்தின் ஒடிடி ரிலீஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ