spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் ஃபேன்ஸ் எல்லாரும் அலர்ட் ஆகுங்க.... 'தி ராஜாசாப்' ட்ரைலர் ரெடி!

பிரபாஸ் ஃபேன்ஸ் எல்லாரும் அலர்ட் ஆகுங்க…. ‘தி ராஜாசாப்’ ட்ரைலர் ரெடி!

-

- Advertisement -

பிரபாஸ் நடிப்பில் உருவாகும் தி ராஜாசாப் படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.பிரபாஸ் ஃபேன்ஸ் எல்லாரும் அலர்ட் ஆகுங்க.... 'தி ராஜாசாப்' ட்ரைலர் ரெடி!பிரபாஸ் தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே சலார் 2, கல்கி 2898AD 2, ஸ்பிரிட் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இது தவிர ஹனு ராகவபுடி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், தி ராஜாசாப் எனும் காமெடி கலந்த ஹாரர் திரில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குனர் மாருதி இயக்கும் இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படமானது 2025 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.பிரபாஸ் ஃபேன்ஸ் எல்லாரும் அலர்ட் ஆகுங்க.... 'தி ராஜாசாப்' ட்ரைலர் ரெடி! அதே சமயம் படத்தின் ரிலீஸ் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிப்போகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த ட்ரெய்லர் 3 நிமிடங்கள் 30 வினாடிகள் நீளம் கொண்டவையாக இருக்கும் எனவும், வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வரும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் இன்டெர்வலின் போது இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பப்படும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ