பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பஹீரா. இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து பிரபுதேவா வுல்ஃப் திரைப்படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் தளபதி 68 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரபுதேவா வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தி நடிகர் ஹிமேஷ் ரேஷமியா நடிக்கும் ‘படாஸ் ரவிக்குமார்’ எனும் படத்தில் பிரபு தேவா வில்லனாக நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. படாஸ் ரவிக்குமார் திரைப்படமானது தி எக்ஸ்போஸ் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இதன் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


