தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த ராயன் திரைப்படம் நேற்று (ஜூலை 26) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. தனுஷின் ஐம்பதாவது படமான இந்த படத்தை தனுஷே இயக்கியும் இருந்தார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், அபர்ணா பால முரளி, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். ஓம் பிரகாஷ் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த வகையில் முதல் நாளில் இப்படம் இந்திய அளவில் கிட்டத்தட்ட 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Team #Raayan….the joy when your work is loved..bliss. Thank you audience 🙏🏿🙏🏿 . Dear @dhanushkraja thank you for making this happen.. ❤️❤️ keep entertaining… pic.twitter.com/B6hkLUSJYG
— Prakash Raj (@prakashraaj) July 27, 2024
மேலும் இனிவரும் நாட்களிலும் இந்தப் படம் வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கும் தனுஷிற்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் ராயன் படக்குழு அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.