Homeசெய்திகள்சினிமாபிரணவ் மோகன்லாலின் புதிய படம்..... மீண்டும் இணையும் ஹிருதயம் படக் கூட்டணி!

பிரணவ் மோகன்லாலின் புதிய படம்….. மீண்டும் இணையும் ஹிருதயம் படக் கூட்டணி!

-

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரணவ் மோகன்லால் கடந்த ஆண்டு வெளியான ‘ஹிருதயம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த நிலையில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இவ்வாறாக வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற ஹிருதயம் திரைப்படத்தின் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது.

இந்தப் படத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசனின் தம்பி தியான் ஸ்ரீனிவாசன், பேசில் ஜோசப், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிக்க இருக்கின்றனர்.

இந்த புதிய படமானது மோகன்லாலுக்கும் இயக்குனர் வினித்தின் தந்தை ஸ்ரீனிவாசனுக்கும் இடையே உள்ள நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். ஸ்ரீனிவாசன் கதாபாத்திரத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடிக்கிறார்.
‘வருஷங்களுக்கு ஷேஷம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் நிவின் பாலி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

MUST READ