spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்தில் பிரசாந்த், பிரபுதேவா.... பதறிப் போய் வேணாம்னு சொன்ன விஜய்!

‘கோட்’ படத்தில் பிரசாந்த், பிரபுதேவா…. பதறிப் போய் வேணாம்னு சொன்ன விஜய்!

-

- Advertisement -

டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாந்த் நடிப்பில் சமீபத்தில் அந்தகன் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. 'கோட்' படத்தில் பிரசாந்த், பிரபுதேவா.... பதறிப் போய் வேணாம்னு சொன்ன விஜய்!அதேசமயம் பிரபுதேவா நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் மூன் வாக், பேட்ட ராப், சிங்கநல்லூர் சிக்னல் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபுதேவா. இந்நிலையில் பிரசாந்த், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து விஜயின் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இதில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் விஜயின் நெருங்கிய நண்பர்களாக நடித்துள்ளனர். விஜய் இந்த படத்தில் இரட்டை இடங்களில் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக மைக் மோகன் நடித்துள்ளார். இவ்வாறு பல முக்கிய பிரபலங்கள் படத்தில் நடித்துள்ளது கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ஏகோபித்த வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. 'கோட்' படத்தில் பிரசாந்த், பிரபுதேவா.... பதறிப் போய் வேணாம்னு சொன்ன விஜய்!இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “விஜய் சார் கிட்ட பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் படத்தில் நடிக்கிறார்கள் என்று சொன்னேன். அப்போது அவர் யோவ்,என்னையா பண்ற? வேணாம்யா … இவ்வளவு பேரை வச்சுக்கிட்டு படம் எடுத்துடுவியா? என்று கேட்டார். யோவ், அவரெல்லாம் நாங்க வரும்போது பெரிய ஸ்டார்யா அப்படின்னு பிரசாந்த்தை பற்றி புகழ்ந்து பேசினார். அதற்கு நான் உங்க கூட நடிக்கிற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் அவங்க கேரக்டர்ஸ் நல்லா இல்லாம படத்தில் நடிக்க வருவாங்களா பிரதர் என்று சொல்லி விஜய் சாரை சமாதானப்படுத்தினேன்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ