- Advertisement -
கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர். சின்ன திரையில் இருந்து வெளிவந்து வெள்ளி திரையில் இவர் நடித்த முதல் திரைப்படம் மேயாத மான். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரியா பவானி சங்கர் படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழில் சிம்பு, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். தமிழ் மட்டுமன்றி தற்போது தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் ஆர்வம் செலுத்தி வருகிறார். டோலிவுட்டிலும் அவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன. இதனிடையே தமிழில், இந்தியன் 2, டிமான்டி காலனி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


