Homeசெய்திகள்சினிமாஅமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் 'ப்ராஜெக்ட் கே' கிளிம்ப்ஸ்...... எப்போது தெரியுமா?

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘ப்ராஜெக்ட் கே’ கிளிம்ப்ஸ்…… எப்போது தெரியுமா?

-

பிரபாஸ், கமல்ஹாசன் கூட்டணியில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் உருவாகி வருகிறது. இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் பான் இந்திய அளவில் உருவாகி வரும் படங்களில் ப்ராஜெக்ட் கே திரைப்படம் முக்கியமான ஒன்றாகும். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகி வரும் இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ப்ராஜெக்ட் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது.
அதே சமயம் இந்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்து இருந்தன.
அந்த வகையில் தற்போது இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை வருகின்ற ஜூலை 20ஆம் தேதி அமெரிக்காவிலும் 21 ஆம் தேதி இந்தியாவிலும் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.
அதாவது 1970களில் இருந்து வருடா வருடம் அமெரிக்காவில் பிரம்மாண்டமாக நடைபெறும் San Diego Comic-con என்ற நிகழ்ச்சியில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை கமல்ஹாசன், பிரபாஸ், மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து வெளியிட இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இச்செய்தி ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ