Homeசெய்திகள்சினிமா'புஷ்பா 2' படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘புஷ்பா 2’ படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

புஷ்பா 2‘ ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.'புஷ்பா 2' படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கியிருந்த படம் புஷ்பா. புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் வெளியான முதல் பாகம் ரசிகர்கள் பத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அல்லு அர்ஜுனின் நடிப்பு பெரிதளவும் பேசப்பட்டு அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் இப்படமானது 2024 ஆகஸ்ட் 15 இல் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.
'புஷ்பா 2' படத்தின் ராஷ்மிகா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இந்நிலையில் ராஷ்மிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ