நடிகை ராதிகா சரத்குமார் சினிமாவுலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
ராதிகா சரத்குமார் கடந்த 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பூவரசம் பூ பூத்தாச்சு எனும் பாடல் இன்று வரை பலரின் ஃபேவரைட் பாடலாக இருக்கிறது.இதைத்தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள், ரெட்டைவால் குருவி, நல்லவனுக்கு நல்லவன் சூரியவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடான்மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் கீழ் பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து, நடித்துள்ளார்.
இதற்கிடையில் தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி வருகிறார். இவ்வாறு பல வழிகளில் திரைத்துறையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில் ராதிகா திரை உலகில் அறிமுகம் ஆகி 45 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.