spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் பரபரப்பான அப்டேட்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் பரபரப்பான அப்டேட்!

-

- Advertisement -

சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நயன்தாரா ஜோதிகா பிரபு வடிவேலு நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கவர்ந்த நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

we-r-hiring

இந்த வெற்றிக்குப் பிறகு, தற்போது 17 வருடங்கள் கழித்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு இயக்குகிறார்.இப்படத்தில் ராகவா லாரன்ஸ், ராதிகா, கங்கனா ரணாவத், லட்சுமிமேனன் வடிவேலு மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் படத்தின்இசை அமைப்பாளர் எம் எம் கீரவாணியின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. ஆர்டி ராஜசேகர் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படம் மும்பை, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் இப்படத்தினை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல் தெரிவிக்கிறது.

MUST READ