Homeசெய்திகள்சினிமாமிகவும் எதிர்பார்க்கப்படும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2...... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

மிகவும் எதிர்பார்க்கப்படும் ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2…… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?

-

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசு தான் இயக்கியுள்ளார். இதில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதிகா சரத்குமார், கங்கனா ரனாவத், வடிவேலு, லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் எம் எம் கீரவாணி இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் மும்பை மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி, சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணி அளவில் வெளியாக இருப்பதாக வேட்டையன் பராக் என்று குறிப்பிடப்பட்ட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

MUST READ