Homeசெய்திகள்சினிமாமரண பயத்தை காட்டும் சந்திரமுகி 2..... முதல் விமர்சனம் கொடுத்த படத்தின் முக்கிய பிரபலம்!

மரண பயத்தை காட்டும் சந்திரமுகி 2….. முதல் விமர்சனம் கொடுத்த படத்தின் முக்கிய பிரபலம்!

-

சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி வாசு இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமிமேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

பாகுபலி, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த எம் எம் கீரவாணி இதற்கு இசை அமைத்துள்ளார். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் படப் படிப்புகள் மும்பை,மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரம்மாண்டமான அரண்மனையில் படமாக்கப்பட்டது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாக இருக்கிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆகஸ்ட் முதல் மாதத்தில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படம் குறித்து இசை அமைப்பாளர் எம் எம் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில், “லைக்கா நிறுவனத்தின் சந்திரமுகி 2 திரைப்படம் பார்த்தேன். இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் மரண பயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருப்பார்கள். நானும் இரண்டு மாதங்களாக இரவு பகல் தூக்கம் பாராமல் இந்த படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு எனது முயற்சியால் உயிர் கொடுத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் சந்திரமுகி 2 திரைப்படம் திகில் நிறைந்த படமாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் படமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ