spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பைக் வாங்கி கொடுத்த ராகவா லாரன்ஸ் - KPY பாலா!

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பைக் வாங்கி கொடுத்த ராகவா லாரன்ஸ் – KPY பாலா!

-

- Advertisement -

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சொந்த செலவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பண உதவிகளை செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பைக் வாங்கி கொடுத்த ராகவா லாரன்ஸ் - KPY பாலா! அதேசமயம் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபலம் அடைந்த பாலாவும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார். இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ராகவா லாரன்ஸ் பாராட்டி இனி பாலா எந்த உதவி செய்தாலும் அதில் என்னுடைய பணமும் இருக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா ஆகிய இருவரும் இணைந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக பைக் வாங்கி கொடுத்த ராகவா லாரன்ஸ் - KPY பாலா!அந்த வகையில் சமீபத்தில் கண்பார்வை இல்லாத சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா இருவரும் இணைந்து பண உதவி வழங்கினர். சமோசா விற்ற பெண்ணிற்கு சொந்த செலவில் ஆட்டோ வாங்கி கொடுத்து அசத்தினர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுத்து உதவி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சிரமப்படும் பெற்றோர்களுக்கு புது பைக் ஒன்றை வாங்கி கொடுத்து பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோவை ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் சேவை என்பது கடவுள் என்று குறிப்பிட்டு பதிவினை வெளியிட்டுள்ளார்.

MUST READ