spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராகவா லாரன்ஸ் தொடங்கிய மாற்றம் அறக்கட்டளை... நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..

ராகவா லாரன்ஸ் தொடங்கிய மாற்றம் அறக்கட்டளை… நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..

-

- Advertisement -
மாற்றம் அறக்கட்டளையை தொடங்கி இருக்கும் நடிகர் ராகவா லாரன்ஸூக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் இறுதியாக சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் வௌியாகின. இதில் ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். ரெமோ, சுல்தான் படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

we-r-hiring
இதுதவிர மற்றொரு திரைப்படம் ஹண்டர். மாபெரும் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். மேலும், இது ராகவா நடிக்கும் 25-வது திரைப்படமாகும்.

இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும், இணைந்து ராகவா லாரன்ஸூடன் சேவை பணியாற்றுவதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த அறக்கட்டளையில் கேபிஒய் பாலா, மற்றும் அறந்தாங்கி நிஷாவும் இதில் இணைந்துள்ளனர். இந்நிலையில், மாற்றம் அறக்கட்டளை தொடங்கிய நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

MUST READ