நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த இரண்டு படங்களின் மூலமும் நடிகர் யாஷ் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அந்த அளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் பேச்சு தான். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் யாஷ் என்ன படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகையாகவும் இயக்குனராகவும் வலம் வரும் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் நடிகர் யார் நடிக்கப் போகிறார் என்றும் அந்த படத்திற்கு டாக்ஸிக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று சொல்லப்பட்டது. அதாவது யாஷுக்கு அக்காவாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதன் பின்னர் சமீபத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதற்கு நயன்தாரா 20 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
அதனால் நயன்தாராவின் கதாபாத்திரம் உறுதி செய்யப்படவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தமிழில் ரஜினியின் காலா, அஜித்தின் வலிமை போன்ற படங்களில் நடித்திருந்த ஹூமா குரேஷி, டாக்ஸிக் படத்தில் நடிக்க உள்ளார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே இது அக்கா கதாபாத்திரமா? அல்லது வேறு ஏதும் கதாபாத்திரமா? என்பது குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -